Sri Baghavathi Amman Temple: கும்பாபிஷேக விழாவில் வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம்!

ஆலம்பாளையம்புத்தூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சியில்அமைந்துள்ள ஆலம்பாளையம்புத்தூர் (மேற்கு)  ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ ராசாயி அம்மன், மற்றும் குதிரை வாகன தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கோயில் வேலைப்பாடுகளை மகாதேவி செல்வராஜ் குழுவினர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது.

கும்பாபிஷேக விழாவைவில் ஸ்ரீ ராமசமுத்திரம் காவேரி ஆற்றிலிருந்து கேரளா தைய கலை நிகழ்ச்சியுடன் மற்றும் குதிரை நடனத்துடன் விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, மீனாட்சி, காளி, போன்ற தெய்வங்களின் தத்ரூபமான வேடத்தில் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றிலிருந்து திரளாகப் பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து  காட்டுப்புத்தூர் ராசுபப்பிள்ளை முடக்கு மற்றும் தவிட்டுப்பாளையம்  வழியாகக் கோவிலை வந்தடைந்தது. மேலும் பல்வேறு யாகசாலை பூஜைகள் மேலும் நான்கு கால யாகசாலை பூஜைகள் உட்பட பல்வேறு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த யாகசாலை பூஜைகளைக் காட்டுப்புத்தூர் கட்டுப்புத்தூர் சிவஸ்ரீ செல்வசுப்பிரமணியம் சிவாச்சாரியார் மற்றும் வாகிஷ்சிவம் குழுவினர்களால் சிறப்பாக நடத்தினர். இரவு 300-க்கும் மேற்பட்ட  ஆண், பெண்கள் குழந்தைகள் ஆகியோர் சிறப்பான வள்ளிகும்மி சிறப்பான ஆட்டம் நடைபெற்றது.

நான்கு கால யாகசாலை பூஜையில் முடிவுற்று யாகசாலையிலிருந்து கடம்புறப்பட்டு காலை 9.30 மணியளவில் ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ ராசாத்தி அம்மன், குதிரை வாகனத்திற்கும்  கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார் ஊற்றினார்கள்.

அப்பொழுது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்தக் கும்பாபிஷே விழாவில் தவிட்டுப்பாளையம் காந்தி சிலை, காட்டுப்புத்தூர், சின்னப் பள்ளிபாளையம், உள்பட ஆலம்பாளையம் புத்துரை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் பெண்கள் பக்தர்கள் 2000- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *