
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 467 வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இதில் மத பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஜாதி, மதம் பேதமின்றி வந்து செல்வார்கள். மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழும் நாகூர் ஆண்டவர் தர்கா கந்துாரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டு 467வது கந்துாரி விழா நேற்று இரவுகொடியேற்றத்துடன்தொடங்கியது
.விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி நாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றத்துடன் நாகூர் ஆண்டவர் தர்கா கந்துாரி விழா தொடங்கியது. முன்னதாக, புனிதக்கொடிகள் நாகை மீரா பள்ளிவாசல் கொண்டுவரப்பட்டு. அங்கு அனைத்து முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் பாத்திஹா ஓதப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தில் புனிதக்கொடி வைக்கப்பட்டது. பெரிய கண்ணாடி அலங்கார ரதத்தை தொடர்ந்து சாம்பிராணி சட்டி ரதம், செட்டிப்பல்லக்கு, டீஸ்டா கப்பல், சின்ன ரதம், போட் மெயில் ஆகிய ரதங்கள் அடுத்தடுத்து அலங்கரிக்கப்பட்டு . மீரா பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் யாகூசன் பள்ளி தெரு, நுால்கடை சந்து, சாலப்பள்ளித்தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.அங்கிருந்து நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு இரவு வந்தடைந்தது.
கொடி ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். நாகையிலிருந்து இருந்து நாகூர் வரை சாலைகளில் பொதுமக்கள் நின்று கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். நாகூர் தர்கா அலங்கார வாசல் வந்த கொடிகள் இறக்கப்பட்டு சாஹிப் மினரா, தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிக்கொடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசல் முன்பு அமைந்துள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா, முதுபக் மினரா உள்ளிட்ட 5 மினராக்களுக்கு கொடிகள் கொண்டு செல்லப்பட்டது.
நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது நாகூர் தர்கா மின்விளக்குகளில் ஜொலித்ததோடு கண்களை கவரும் வகையில் வாணவேடிக்கை நிகழ்வும் அரங்கேறிய து. கொடியேற்றத்தையொட்டி, நாகை எஸ்பி. ஹர்ஷ் சிங் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் வரும் 23ம் தேதி இரவு நடைபெற உள்ளது. வரும் 24ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தர்கா நிர்வாகம் செய்துள்ளது.





