எஸ்.பி. வேலுமணிக்கு குறி வைக்கும் திமுக…!

Advertisements
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் இனிமேல் அரசியல் கட்சிகள் அதிரடி திட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டம் தொடங்கியிருக்கிறது.
ஆட்சியைப் பிடிப்பதற்காக அரசியல் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது தமிழக வாக்காள பெருங்குடி மக்கள் நன்றாக அறிந்த விஷயம் தான்
அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான எஸ் பி வேலுமணி ஏராளமான தொந்தரவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தி தருவதாக சொல்லப்படுகிறது
அந்த வகையில் எஸ் பி வேலுமணியை தூக்கி உள்ளே வையுங்கள் என மு க ஸ்டாலின் திரை மறைவில் உத்தரவிட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் எஸ் பி வேலுமணியும் என்ன செய்வது என தனியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை செய்து வருகிறார்கள்
அதிமுகவை பொருத்தவரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாகவும் அவருக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் எஸ்பி வேலுமணி ஆலோசனையின் பேரில்தான் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான முடிவுகளை எடுக்கிறார் என்பது திரை மறைவு செய்தியாகும்
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் பல முக்கிய துறைகளின் அமைச்சராக பவனி வந்தவர் எஸ் பி வேலுமணி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் எஸ்பி வேலுமணி மிகப் பெரிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தார்
எஸ் பி வேலுமணி தற்பொழுது அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்து இரண்டாம் கட்ட தலைவராக பார்க்கப்படுகிறார். தற்பொழுது எஸ்பி வேலுமணியின் தலைமையில் மிகப்பெரிய அதிமுக குழுவினர் ஒரு அமைப்பாக செயல்பட்டு திமுகவுக்கு எதிரான வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகிறார்கள் குறிப்பாக கோவை உள்பட நான்கு மாவட்டங்களில் 10 தொகுதிகள் எஸ்பி வேலுமணி கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது
தற்பொழுது திமுகவை பொருத்தவரையில் கோவை மண்டலத்தில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செந்தில் பாலாஜி தலைமையில் மிகப்பெரிய குழு அமைக்கப்பட்டு அவர்களும் இரவு பகலாக இப்பொழுதே வேலை பார்த்து வருகிறார்கள்
இந்த நிலையில் கோவை மண்டலத்தில் பல தொகுதிகளில் எஸ்பி வேலு மணியின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது அதனை உடைக்க வேண்டும் என திமுக மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
அந்த வகையில் எஸ் பி வேலுமணியின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் திமுக மேலிடம் அதிரடியாக களத்தில் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்
எஸ்பி வேலுமணியை பொருத்தவரையில் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஏராளமான ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன
குறிப்பாக தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் ப்ளீச்சிங் பவுடர் துடப்ப கட்டைகள் வாங்கியதில் கூட எஸ் பி வேலுமணி ஊழல் செய்திருக்கிறார் என்ற புகார்கள் இருக்கின்றன. இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்து இருக்கிறது
இதனிடையே ஸ்மார்ட் சிட்டி முறையீடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன
இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தெரு விளக்குகள் மாற்றியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வழக்குகள் இருக்கின்றன இது தொடர்பாக அவரது வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி ரைடு நடத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் எல் இ டிபல்புகள் பொருத்தும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதன் மூலம் 900 ரூபாய் மதிப்புள்ள ஒரு எல்இடி பல்பை 6000 ரூபாய் ஸகொடுத்து வாங்கியதாக பில் போடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ் பி வேலுமணி மீது புகார் பதிவு செய்திருக்கிறது
இதற்கிடையே ஊழல் புகார்களில் சிக்கிய இன்னொருவர் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார் அவர் என்ஜினீயர் சந்திரசேகர் என்பவர். இவர்தான் எஸ்பி வேலுமணிக்கு வலதுகரமாக இருந்து அனைத்து ஊழல் வேலைகளையும் திரை மறைவில் செய்தார் என்பது குற்றச்சாட்டு ஆகும். இதனிடையே அவர் திடீரென எஸ்.பி வேலு மணியோடு சண்டை போட்டு கட்சியை விட்டு விலகி விட்டார்
ஆனாலும் எஸ் பி வேலுமணி அதிர்ச்சி அடையாமல் பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தோடு தொடர்பு கொண்டு தன்னை வலுப்படுத்திக் கொண்டார்
இதனிடையே இன்ஜினியர் சந்திரசேகரை அப்ரூவராக மாற்றி வேலுமணியின் மொத்த அரசியல் வாழ்வையும் காலி செய்வதற்கு திமுக தரப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டன ஆனால் அவை தோல்வியில் முடிவடைந்தன இந்த நிலையில் பொறியாளர் இன்ஜினியரை எஸ்பி வேலுமணி சமாதானப்படுத்தி மீண்டும் அவரை அதிமுகவில் மீண்டும் இணைய வைத்து விட்டார்
தற்பொழுது ஏஎஸ்பி வேலுமணி தொடர்பான அனைத்து தரப்பு வழக்குகளும் தூசி தட்டப்பட்டு உடனடியாக இது தொடர்பாக மீண்டும் புகார்கள் எழுப்பப்படுவதற்கு திமுக தரப்பில் மிகப்பெரிய திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன
அந்த வகையில் இன்ஜினியர் சந்திரசேகரை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான திரை மறைவு வேலைகளை திமுக தரப்பு மேற்கொண்டு இருக்கிறது
தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக இருக்கும் எஸ் பி வேலுமணியை தூக்கி சிறையில் அடைத்து விட்டால் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட முடியாத நிலைமைக்கு ஆளாவார் என்பது மட்டுமல்ல கோவை மண்டலத்தை வேறு யாரும் கையாள முடியாது என்ற சூழ்நிலையும் உருவாகும்
எனவே வெகு விரைவிலேயே எஸ்பி வேலுமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அடுக்கப்பட்டு அவரைப்பற்றி பொது மேடைகளிலும் திமுக தரப்பில் விமர்சிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
இது பற்றிய தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்ட எஸ்பி வேலுமணியும் எடப்பாடி பழனிச்சாமியும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *