அரசியல் மேடைகளில் “உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன்” என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான பச்சை பொய் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
“பொதுமேடைகளில் ‘உங்க வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன்’ என்று சிலர் பச்சை பொய் பேசுகிறார்கள். பாசம் என்பது வெறுமனே வார்த்தைகளில் வருவத அல்ல. உண்மையான பாசம் என்று சொன்னால், ஒருவர் தன் தாய் தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் என்பது அங்கேதான் பிறக்கும். சொந்த குடும்பத்திலேயே பாசம் காட்டாதவர்கள், மக்களுக்கு எப்படி பாசமாக இருப்பார்கள்?”
என காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
அரசியல் எதிராளிகளின் பிரசார உத்திகளையும், போலியான வாக்குறுதிகளையும் கடுமையாக விமர்சித்து அவர் பேசிய இந்த பேச்சு, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


