அதிமுக கூட்டணி பலமானதா? பலவீனமானதா?

Advertisements
அதிமுக தலைமையில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருக்கும் கூட்டணி வலுவான கூட்டணிதானா? இந்த கூட்டணி வெற்றியைப் பெற்றுத் தருமா? என்பது குறித்து ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது
அந்த வகையில் கூட்டணி குறித்து  எடப்பாடி பழனிச்சாமி மறு பரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என்று அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது
வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியை யார் பறிப்பது என்பது கடுமையான போட்டியாக இருக்கும் பட்சத்தில் அதிமுக அசால்டாக இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன
அந்த வகையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி கட்டிலை பிடிக்குமா? அல்லது அதிமுக ஆட்சி கட்டிலில் அமருமா என்பது பரபரப்பான கேள்விக்குறியாக இருக்கிறது
அந்த வகையில் அதிமுக தரப்பில் வெற்றி வாகை சூடுவதற்கான கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்தி இருக்கிறாரா என்ற கேள்விக்கான விடை புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
தற்பொழுது அதிமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணியாக சேர்ந்திருக்கின்றன
இந்த நிலையில் பழைய ஏடுகளை புரட்டிப் பார்த்தால் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இப்பொழுதும் அதிமுக சரியான கூட்டணி அமைக்காவிட்டால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்
ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது இந்த நிலையில் அந்த கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு தற்பொழுது அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும் மூன்று தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்பது தெரிகிறது. ஆக அன்புமணி தரப்பில் 13 தொகுதிகள் பின்னடைவை சந்திப்பதாக தெரிகிறது
அடுத்தபடியாக ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி முதலியார் சமூக வாக்குகளை மையமாகக் கொண்டது.கடந்த பல தேர்தல்களில் பெரிய கட்சிகளின் சின்னத்திலேயே இந்த கட்சி போட்டியிட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் புதிய நீதி கட்சிக்கு தனித்துவமான முகம் எதுவும் கிடையாது
அடுத்தபடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா முன்னேற்ற கழகம் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஐந்து சதவீத வாக்குகளை பெற்றது ஆனால் அதன் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் கடும் சரிவை சந்தித்தது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட இந்தகட்சிக்கு தற்போது வாக்கு வங்கி மிகவும் குறைவாகவே இருக்கிறது
ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நம்பி இருக்கிறது. இதுவரை இந்த கட்சியைச் சார்ந்த எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
ஜி கே வாசன் தலைமையான தமிழ் மாநில காங்கிரஸ் எந்த ஒரு தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற்றது கிடையாது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று இடங்களில் போட்டியிட்டாலும் அவை அனைத்திலும் தோல்வியை தழுவியது
பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் செல்வாக்கு பெற்று இருக்கிறது. இந்த கட்சியின் வாக்கு வங்கி என்பது பூஜ்ஜியம் புள்ளி ஐந்து சதவீதம் என்பதற்கும் குறைவாகத்தான் இருக்கிறது
இதேபோல் வருங்காலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் கூட அந்தக் கட்சிக்கு பூஜ்ஜியம் புள்ளி 45 சதவீத வாக்குகளே இருக்கின்றன அதாவது ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள் இருக்கின்றன
எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருப்பது பல கட்சிகளை கொண்ட கூட்டணியாக இருந்தாலும் இதன் பின்னணியில் அவை அனைத்தும் வாக்கு வங்கியில் மிகவும் பின்தங்கியவையாக இருக்கின்றன
எனவே இந்த கூட்டணி கட்சிகள் அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு கை கொடுப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்
இது அல்லாமல் சசிகலா புதிய தேர்தல் களம் குதிக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு அடுத்த கட்ட பின்னடைவு இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் டிடிவி தினகரன் தரப்பில் ஆன அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் தற்பொழுது அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரு வேறு அணிகளாக பிரிந்து இருப்பதால் அதிலும் பலகீனம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்
எனவே அதிமுக கூட்டணியை பொருத்தவரையில் இன்னமும் பலமான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை இருக்கிறது இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மையமாக வைத்து அதிக தொகுதிகளை பெற்று பாரதிய ஜனதா கட்சி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறது எனவே அந்த சூழ்நிலையையும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வேண்டியது இருக்கிறது. மிகப்பெரிய கூட்டணி என பாஜக அமைந்து விட்டாலும் கூட பின்னணியில் பல சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன இதுவும் அதிமுகவுக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது
அந்த வகையில் அதிமுக தரப்பில் சில புதிய முடிவுகளை எடுக்க வேண்டும் குறிப்பாக அதிக தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட வேண்டும் தொகுதியில் செல்வாக்கு பெற்ற பிரமுகர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் தேர்தல் அறிக்கையை பிரமாதமாக வெளியிட வேண்டும் என்பது போன்ற சூழ்நிலைகள் வெற்றியைப் பெற்றுத் தரலாம் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *