Spotted Deer: இறை தேடி கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மான்!

ஆத்தூர் நகரப் பகுதிக்கு இறை தேடி வந்த ஒரு வயது ஆண் புள்ளி மானைப் பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.போதுமான இறை கிடைக்காத நிலையில் வனவிலங்குகள் நகர பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பைத்தூர், ராமநாயக்கன் பாளையம், நாகலூர், முட்டல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் புள்ளிமான் உள்ளன. மேலும் அதிக அளவில் வனவிலங்குகளும் உள்ள நிலையில் இறை மற்றும் குடிநீர் தேடி மலையோர அடிவாரப் பகுதிகளில் வந்து செல்கின்றன. இந்நிலையில் போதுமான இறை கிடைக்காத நிலையில் வனவிலங்குகள் நகர பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளன.

இந்நிலையில் ஆத்தூர் அருகே பாம்பாட்டி தெரு பகுதியில் ஒரு வயது மதிக்கத் தக்க ஆண் புள்ளிமான் இறை தேடி சுற்றி திரிந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அங்குமிங்கும் ஓடிய ஆண் புள்ளி மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியதை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நாய்களை விரட்டிப் புள்ளிமானை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதுகுறித்து ஆத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் ஆண் புள்ளி மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் முட்டல் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *