
பெண்களுக்குச் சரிபாதி உரிமை மற்றும் வளங்களைக் காக்கக் கடுமையான உழைப்பே வழி எனச் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சீமான் பேசியபோது, நமது ஆட்சியில் பெண்களுக்கும் சரிபாதி உரிமை உள்ளது, அது நமக்குப் பெருமை இல்லை, நமது பிறவிக் கடமை என்று தெரிவித்தார்.
மொழி, நிலம் மற்றும் வளம் அழிவதைத் தடுத்து, நஞ்சாகும் சுற்றுச்சூழலை மீட்கக் கடுமையான உழைப்பு மட்டுமே ஒரே வழி என்று கூறினார். தொடர்ந்து பேசிய சீமான், அந்த மாற்றத்திற்கான வாய்ப்பு நம் கைகளிலேயே உள்ளது என்று தெரிவித்தார்.
நாம் சாதாரணமானவர்கள் அதனால் சாகலாம் தோற்கலாம். ஆனால் சத்தியம் நிச்சயம் வெற்றிபெறும், சத்தியம் தோற்றதாகச் செய்தியில்லை என்று கூறினார். நாம் சத்தியத்தின் பக்கம் நிற்கும் மக்கள் ஒருநாள் வெல்வோம் ’ என்று தெரிவித்துள்ளார்.



