Community Change Case: மதம் மாறச் சொல்லி இளைஞருக்கு அடி!

Advertisements

கோவை மருதமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் என்ற இளைஞர் ஒருவர் வேலைக்குச் சென்ற இடத்தில் மதம் மாறச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியதாகவும் தன்னுடைய கல்லூரி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான சம்பளத்தையும் தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதுகுறித்து மனோஜ்குமார் அளித்துள்ள மனுவில், தான் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் படித்துள்ளதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு எங்கள் வீடுள்ள பகுதியில் வினியா என்பவர் இடம் வாங்கிய நிலையில் அவர் தனது குடும்ப சூழலைப் பார்த்து அவரது நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி அழைத்துச் சென்று சிறிது காலம் கழித்து நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு தன்னை அழைத்துச் சென்று வீட்டு வேலை வேலை வாங்கி வந்ததாகவும் அப்போது தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்கும் தன்னை அனுமதிக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ள அவர் இரண்டு ஆண்டுகளாக எவ்வித சம்பளம் தராமல் வேலை வாங்கி துன்புறுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய கல்லூரி சான்றிதழ்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் சம்பளத்தை கேட்டால் தன்னை அவர்களது மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தியதாகவும் அதுமட்டுமின்றி அவரது நண்பரை அழைத்தும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து கோவிலுக்குச் சென்று வருகிறேன் எனக் கூறி தப்பி வந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ள மனோஜ் குமார் வினியா மற்றும் அவரது குடும்பத்தாரிடமிருந்து தனது கல்லூரி சான்றிதழ்கள் இரண்டு வருட சம்பளத் தொகுதியைப் பெற்று தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவரது தாயார் கூலி வேலை செய்து வருவதும், இவரது தந்தை மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *