
அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு போராளி என்றும் எதற்கும் அஞ்சாமல், பாஜக ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடியவர் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு போராளி என்றும் எதற்கும் அஞ்சாமல், பாஜக ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.
மூன்றாவது முறையும் முதலமைச்சராக வரவேண்டியவர் என்றும் பாஜக அவதூறு வழக்குப் போட்ட நிலையில் அதில் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தை இங்குத் தொடங்கி வைத்தவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்றும் அவருக்கும் நமக்குமான உறவு மிகவும் நெருக்கமானது என்றும் குறிப்பிட்டார்.




