போர் மீண்டும் வெடித்தால் அதை எதிர்கொள்ள ஈரான் தயார் – காலிபாஃப்.!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான பேச்சுக்கு முன்னதாக, போர் மீண்டும் வெடித்தால் அதை எதிர்கொள்ளப் புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாக ஈரான் சபாநாயகர் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமைதிப் பேச்சுக்கான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் தனது சமூக வலைப்பதிவில், செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சு நடத்த முடியாது என்று தெரிவித்தார். போர் நிறுத்தம் முடிவதற்குள் மீண்டும் மோதல் வெடித்தால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்கொள்ளப் புதிய வியூகங்களுடன் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், மத்திய கிழக்கு மண்டலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *