SIR பணியின் படிவங்களைச் சமா்ப்பிக்க அவகாசம் இன்றுடன் முடிவு.!

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின் போது, வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 கோடியே 41 இலட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளன. இந்நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின் போது, 6 கோடியே 41 இலட்சத்து 10 ஆயிரத்து 380 வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில், பதிவேற்றப்பட்டக் கணக்கீட்டுப் படிவங்களில் முகவரி மாறியவா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளவா்கள், உயிரிழந்தவா்கள், முந்தைய முகவரியில் இல்லாதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள் ஆகியோர் உள்ளனா்.

இவர்களை, நீக்கி வருகின்ற 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலைத் தோ்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதில், பெயா் விடுபட்டவா்கள் ஆவணங்களைச் சமா்ப்பித்து புதிதாக தங்களைச் சோ்த்துக் கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *