அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் – ஜெலன்ஸ்கி.!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் தேர்தல் நடத்த தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்,ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

இதையடுத்து, ரஷ்யா உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு தர மறுப்பதால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யா போரால் தேர்தல் தடைபட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உக்ரைன் ஜனநாயகமில்லாத நாடு என்றும் ஜெலன்ஸ்கி தேர்தலை தவிர்க்க போரை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

இதனால் ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் 60 முதல் 90 நாட்களில் தேர்தல் நடத்த தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *