Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” – மீண்டும் சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !

Advertisements

ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன் மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது என மதுரையில் சவுக்கு சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனங்களைச் சந்தித்தவர் அல்ல விமர்சானை பார்த்துப் பழகி வரோ வளர்ந்தவரோ அல்ல தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான் முதலமைச்சர்.

மதுரை மத்திய சிறையிலிருந்து யூடியுபர் சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியில் வந்தார். அப்போது அங்குவந்த பாஜகவினர் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சவுக்கு சங்கர்…,” எனக்கு 3 இடங்களில் எலும்புகள் உடைத்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் என்னைக் கஸ்டிடி எடுக்கும்போதும் திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக் கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் நிபந்தனையாகக் கூறினார்கள். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம் அதை மீறினால் நாங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு உங்களைச் சிறையிலிருந்து விடமாட்டோம் எனக் கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள். நான் உண்மைகளைப் பேசுவது என்று அஞ்சமாட்டேன் எனப் பதில் அளித்தேன்.

அதன் காரணமாக இரண்டாவது முறையாகக் குண்டர் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தார்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களைச் சந்தித்தவர் அல்ல ; விமர்சனங்களைப் பார்த்துப் பழகியவரோ வளர்ந்தவரோ அல்ல தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான் மு.க.ஸ்டாலின். பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தார் கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள். அது போலத்தான் திமுக தலைவரும் தற்போது முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார். உண்மையைச் சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிகொண்டுவந்தததன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, அலுவலகம் சீலிடப்பட்டது வீடுகளும் சீலிடப்பட்டுள்ளது எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காக முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாற்ற வேண்டும். எனப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் தமிழக டிஜிபி சங்கர் ஜி வால் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாகக் கருதப்படுகிறது. அதைத் தடுக்க வேண்டும் அதைத் தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும். எனத் தமிழக உள்துறை அமைச்சருக்குச் சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் எழுதி இருக்கிறார். இந்தக் கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் என்றால் 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிர் போயிருக்காது இது போன்ற உண்மைகள் மக்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காகச் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.

நான்கு நாட்களுக்கு முன்பாகத் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சார் வீதம் பாஸ்போர்ட் வழக்குகுறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரைக் கைது செய்துள்ளனர். சவுத் மீடியாவில் பணியாற்றிய நபர்கள்மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். இது தனிநபருக்கு நடந்த கொடுமையாகப் பார்க்கக் கூடாது ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாகத் தான் பார்க்க வேண்டும். ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையிலிருந்து வெளி வந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

எனது கையைக் கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள் தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல் வளையையும் நெருக்குவது நிறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு மக்கள் எப்போது முடியும் எனக் காத்திருக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *