
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மிக மிக அருகில் நெருங்கி விட்டது. அதே சமயம் வரலாறு காணாத வகையில் தமிழக அரசியல் கட்சிகள் இடையே தற்பொழுது கூட்டணி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி உள்ளன. வழக்கம்போல தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என சீமான் அறிவித்த நிலையில் தமிழக வெற்றி கழகம் அதிமுக திமுக ஆகிய மூன்று கட்சிகளிலும் கூட்டணி போர் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் , திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி மிகப்பெரிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் என இதர கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதேபோல, அதிமுக தரப்பிலும் பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு தொகுதிகளை அதிகப்படுத்தி தரவேண்டும் . அமைச்சரவையில் பதவி தர வேண்டும் என ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது பற்றி தினந்தோறும் பரபரப்பு பேச்சாக நிலவி வருகிறது.
இதில் பிரேமலதா விஜயகாந்த்தை பொருத்தவரையில் அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை வைத்து திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் நெருக்கடி செய்து வருகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் . விருதுநகர் தொகுதியை தனது மகன் விஜய பிரபாகரனுக்கு ஒதுக்கி தரவேண்டும் . அதுமட்டுமில்லாமல் ராஜ்ய சபா பதவி தர வேண்டும். மேலும் தேர்தல் செலவு பொறுப்புகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கிறார்.
அதிமுக தரப்பில் முற்றிலுமாக இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட பணிகளில் இறங்கி விட்டார். பிரேமலதா விஜயகாந்த் பேசி வரும் பேரம் தமிழ்நாடு முழுவதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் கடுப்பான நிலையில் இருக்கிறார். இதற்கிடையே திமுக தரப்பில் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என மு க ஸ்டாலின் உட்பட பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக அதிமுக சார்பில் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடுத்த கட்டமாக திமுக தரப்பில் அமைச்சர் ஏவா வேலு பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதிக்கட்டமாக 10 தொகுதிகளை ஒதுக்கி தருவதாகவும் விஜய பிரபாகரனுக்கு ராஜ்யசபா பதவி தருவதாகவும் அது மட்டுமல்லாமல் விருதுநகர் தொகுதி ஒதுக்கி தருவதாகவும் , மேலும் தேர்தல் செலவு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாகவும் இது மட்டுமில்லாமல் ஆண்டாள் அழகர் கல்லூரி விற்கப்பட்ட விவகாரத்தில் மீதமுள்ள 150 கோடி ரூபாய் பணம் வசூலித்து தருவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
விருதுநகர் தொகுதியை விஜய பிரபாகரனுக்கு ஒதுக்கும் நிலையில் அவர் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அதேசமயம் தோல்வியடைந்தால் ராஜ்யசபா பதவி அவருக்கு தரப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது. இருந்தபோதிலும் பிரேமலதா விஜயகாந்த் இதற்கெல்லாம் இன்னமும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். தக்க சமயங்கள் பார்த்து திமுக தரப்பையும் தாக்கி பேசி வருகிறார்.திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் அவரது பேச்சு நீடிக்கிறது.
இந்த நிலையில், தற்பொழுது மு க ஸ்டாலினும் பிரேமலதா விஜயகாந்த் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கடுப்பான நிலையில் இருக்கிறார்.எனவே பிரேமலதா விஜயகாந்த் தொடர்பான பேச்சுவார்த்தையை முடித்து கொள்ளுங்கள் . இனிமேல் அவர்களாகவே தேடி வரட்டும் கூட்டணியில் தேமுதிக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என மு க ஸ்டாலின் உச்சகட்ட முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் பிரேமலதா விஜயகாந்த் பேரம் பேசும் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் அளவுக்கு மீறி பேரம் பேசுவதாக தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் பரவி வருகின்றன இது தேமுதிக மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த நிலையில் , பிப்ரவரி மூன்றாவது வாரம் தனது முடிவை வெளியிடலாம் என பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இனிமேல் பிரேமலதா விஜயகாந்த் தான் தாழ்ந்து வர வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருப்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறறது…


