ஸ்டாலினை குற்றம் சாட்டிய எஸ்.பி.வேலுமணி.. எதற்காக தெரியுமா..?

திமுகவின் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கோவையில் எந்தப் புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக தொண்டர்களும் வேட்பாளர்களும் வரவேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கோவையில் பெரிய வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோவையில் எந்தப் புதிய திட்டங்களையும் கொண்டுவரவோ நிறைவேற்றவோ இல்லை என்றும் வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *