வேலூர் விபத்தில் 3 பேர் பலி!

Advertisements

வேலூர்:

வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் லாரிமீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சர்வீஸ் சாலையில் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்துகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *