சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்!

Advertisements

தூத்துக்குடி – சென்னை இடையே இரவு விமான சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. அதேபோல் விமானம் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்குப் பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இரவு நேர விமானச் சேவைக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் விமான நிறுவனம் மூலம் தூத்துக்குடி – சென்னை இடையே காலை 8 மணி, பகல் 11.25 மணி, பிற்பகல் 1.50 மணி, மாலை 4.15 மணி ஆகிய 4 விமானச் சேவையும். தூத்துக்குடி – பெங்களூர் இடையே நண்பகல் 12.15 மணிக்கு ஒரு விமானச் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

நாள்தோறும் 5 விமானங்கள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடி – சென்னை இடையே இரவு நேர விமானச் சேவையைத் தனியார் விமான நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது.
அதேபோல் இன்று முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமானச் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்குச் சென்னை புறப்படும் விமானம் காலை 8.10 மணிக்கும், பகல் 11.25 மணிக்குப் புறப்படும் விமானம் 12.05 மணிக்கும், 12.15 மணிக்குப் புறப்படும் பெங்களூர் விமானம் மதியம் 1.10 மணிக்கும், மாலை 4.15 மணிக்குப் புறப்படும் சென்னை விமானம் 4.10 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மதியம் 1.50 மணிக்குச் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லக்கூடிய விமானம் இரவு நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த விமானம் தினமும் சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.55 மணிக்குத் தூத்துக்குடியை வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்குச் சென்னையை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *