அதிரடி காட்டிய TTV தினகரன்..வேட்பாளர்கள் யார் தெரியுமா..?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நால்முனைப் போட்டி நிலவுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நாங்குநேரியில் இசக்கிமுத்து, மடத்துக்குளத்தில் சண்முகவேல், பூவிருந்தவல்லியில் ஏழுமலை, சைதாப்பேட்டையில் செந்தமிழன் ஆகியோர் அமமுக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மேற்குத் தொகுதியில் ராஜசேகரன், பெரியகுளத்தில் கதிர்காமு, மன்னார்குடியில் காமராஜ், திருவையாற்றல் கார்த்திகேயன், காரைக்குடியில் தேர்போகி பாண்டி, திருப்பத்தூரில் ஞானசேகரன், ஓட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜன் ஆகியோர் அமமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தினகரன், 120 உறுதிமொழிகள் அடங்கிய அமமுகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் கேட்டிருந்த தொகுதிகளையே தங்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகத் தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *