சவுகார் ஜானகி மறைவு: தமிழ்நாடு காங்கிரஸ் இரங்கல்!

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 94 வயதில் சவுகார் ஜானகி காலமான செய்தி மிகுந்த வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான சவுகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் என்றும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றதையும் மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார். சவுகார் ஜானகியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலையுலகினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *