
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக 17 ஓவராகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
ஷாய் ஹோப் 48 ரன்களும் ஹெட்மயர் 48 ரன்களும் குவித்தனர். இதையடுத்து, டக்வர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவரில் 6 விக்கெட்டு இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் இந்தத் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது குடகேஷ் மோடிக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.




