Today Gold Rate:மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Advertisements

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னை:கடந்த ஜூலை மாதம்வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியிலிருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாகத் தாறுமாறாகத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 21-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.58,400-க்கு விற்பனையானது.

Today Gold Rate

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையைப் போல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112 என விற்பனையாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *