Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 28.10.2023

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

இன்றைய பஞ்சாங்கம்

28-10-2023, ஐப்பசி 11, சனிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 01.54 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் காலை 07.31 வரை பின்பு அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 05.54 வரை பின்பு பரணி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.31 வரை பின்பு சித்தயோகம். பௌர்ணமி விரதம். அன்னாபிஷேகம். சந்திர கிரகணம் இரவு 1.03-2.24. வாஸ்து நாள் காலை 7.47 மணி முதல் 8.23 மணி வரை.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

மேஷம்


இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.

ரிஷபம்


இன்று வண்டி வாகனங்களால் பண விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மிதுனம்


இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

கடகம்


இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

சிம்மம்


இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

கன்னி


இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

துலாம்


இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

விருச்சிகம்


இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு


இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்


இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்


இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.

மீனம்


இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *