பிப்ரவரி 27-ல் “போர்த் ப்ளோர்” திரைப்படம் வெளியீடு..!

நடிகர் ஆரி அர்ஜீனின் “போர்த் ப்ளோர்” திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுத் தெரிவித்துள்ளது.

இயக்குநர் சுந்தரபாண்டி இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜீனின் போர்த் ப்ளோர் எனும் புதிய திரில்லர்படத்தில் நடித்துள்ளார். இதில், தீப்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து, இவர்களுடன் பவித்ரா,இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 27 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *