பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 80 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானில் விடுதலைப் படை அமைப்பினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் பயங்கரவாதிகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் படை அமைப்பினர் தீடிரென்று தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மூன்று நாட்களாகத் தொடர்ந்து பலுசிஸ்தானின் குவெட்டா,குவாதர்,மக்ரான் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர்.

அதற்குப் பாகிஸ்தான் ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் உயிர் மாய்க்கப்பட்டதோடு இராணுவத்தைச் சேர்ந்த 10 பாதுகாப்புப் படையினரும் உயிர் மாய்க்கப்பட்டதாக அந்நாட்டரசுத் தகவல் தெரிவித்துள்ளது.

நுஷ்கியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு படை தலைமையகம் மற்றும் எல்லைப் படை தளங்களைக் கைப்பற்றியதாக விடுதலைப்படை அமைப்பினர் கூறியுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அரசாங்கம் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *