Sonia Gandhi: சோனியா காந்தி பிறந்த தினம்!

Advertisements

இந்தியாவின் முன்னணி தலைவர்களில் புகழ் மிக்க பெண்  அரசியல் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த தினம் இன்று.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த  இந்தியாவில் புகழ் பெற்ற பெண் அரசியல்வாதி சோனியா காந்தி. சோனியா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்து நேரு- இந்திரா காந்தி குடும்பத்து மருமகளானார்.

இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவி ஆவார். தனது கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்ந்த 1991 ஆம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்து அதிகாரங்களையும் தீர்மானிக்கும் தலைவியாகவும்  இருந்தார்.

இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவரான சோனியா காந்தி, 2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் 3-ஆவது இடத்திலும் 2007-ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் 6-வது இடத்திலும் உள்ளார்.

மேலும் டைம் பத்திரிகையும் இவரை 2007 மேலும் அவர் 2008ம் ஆண்டு உலகில் உள்ள அதிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இளமைப்பருவம்;

சோனியா காந்தி இத்தாலி நாட்டின் வெனிடோ என்ற பிரதேசத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறு கிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ ஆகியோருக்கு 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி மகளாக பிறந்தார். டுரின் என்ற நகருக்கு அருகில் உள்ள ஆர்பாஸனோவில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார்.
உயர்கல்வி;
1964ல், கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையின் மொழிப் பள்ளியில் அவர் ஆங்கிலம் கற்கச் சென்றார். அப்போது அவர் கிரேக்க உணவகத்தில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார்.

திருமணம்;

அந்த உணவகத்தில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேரப் பதிவுசெய்திருந்த ராஜீவ் காந்தியை 1965ல் சந்தித்தார். பிறகு இருவரும் 1968-ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர், அதைத்தொடர்ந்து சோனியா காந்தி தனது மாமியாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் இல்லத்திற்குச் சென்று வாழத் தொடங்கினார்.

ராஜீவ்-சோனியா இணைக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். செல்வாக்கு மிக்க நேரு குடும்பத்தைச் சார்ந்திருந்த போதிலும் ராஜீவ் ஒரு விமானியாக பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில் சோனியா தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார்.

1980 சூன் 23-ல் தனது இளைய சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தமையால் ராஜீவ் காந்தி 1982ல் அரசியலில் கால்பதிக்க நேர்ந்தது. எனினும் சோனியா காந்தி பொதுவாழ்வில் இருந்து விலகியே இருந்தார்.

அவரது மாமியார் படுகொலைக்குப் பிறகும் மற்றும் அவரது கணவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கணவருக்கு அரசியலில் பக்கபலமாக இருந்தார்.

காங்கிரசு கட்சியின் தலைவர்;

கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு சோனியா காந்தி பிரதம மந்திரியாக மறுத்ததால், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், பிரதம மந்திரியாகவும் நரசிம்ம ராவை ஒரு மனதாகத் தேர்வு செய்தார்.

பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரியை சோனியா காந்தி நியமித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியான தலைமை பொறுப்பிற்கு சோனியா காந்தி வரவேண்டும் என்ற பல காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று 1997ல் கல்கத்தா வருடாந்திரக் கூட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராகி அடுத்த ஆண்டு 1998ல் அதன் கட்சித் தலைவரானார்.

அடிப்படை உறுப்பினராக 62 நாட்கள் ஆகியதும் அவரையே கட்சியின் அவைத்தலைவராக்க வலியுறுத்தப்பட்டது. அவர் மக்களவைத் தேர்தல்களில் கர்நாடகாவில் பெல்லாரி மற்றும் 1999 நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் அமேதி ஆகிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பெல்லாரியில் தொகுதியில் பாஜகவின் அனுபவமிக்கத் தலைவரான சுஷ்மா சுவராஜைத், தோற்கடித்தார்.
2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரே பரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்;

1999ல் பதின்மூன்றாவது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்து வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

வெற்றி;

2004 பொதுத் தேர்தல்களில், அவர் உத்திரப்பிரதேசத்தில் ரே பரேலி தொகுதியில் இருந்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2006 மே மாதம் நிகழ்ந்த ரே பரேலி நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சோனியா காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதாவது 4,00,000 ஓட்டுக்களில் வெற்றிபெற்றார்.

2007 ஜூலை 15 ஆம் நாள் ஐ.நா.சபை கொணர்ந்த தீர்மானத்தின் படி அவ்வாண்டு அக்டோபர் 2 ஆம்நாள், அதாவது மகாத்மா காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினம் என்று அனுசரித்த வேளையில் அவர் ஐ.நா சபையில் உரையாற்றினார்.

எளிமையான பழக்க வழக்கங்களில் முனைப்பு;

சோனியா காந்தி எப்போதும் எளிமையைத் தான் விரும்புவார். தனது பிள்ளைகளையும் பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார். இன்றும் கட்சி செயல்பாடுகளில் பங்கு கொள்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *