புதிய அப்டேடை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்!

Advertisements

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகளாக இருந்து வந்த ரீல்ஸ் நேரம் தற்போது 3 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கடந்த 2010ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது.

இன்று உலகளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காகப் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது ரெக்டேங்குலர் வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களைக் ஷோ செய்வது போன்ற புதிய அம்சங்களையும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும், ரீல்ஸ் நேரம் நீட்டிப்பை தவிர மற்ற இரண்டு அம்சங்கள் விரைவில் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் எனத் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இதனை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி உறுதி செய்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *