
ஆர்டர் செய்ததோ சிக்கன் பிரியாணி.. ஆனா கிடச்சதோ பல்லி பிரியாணி.. ஹைதராபாத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் சிக்கன் வந்ததோ இல்லையோ பல்லி இருந்தது. சிக்கன் பிரியாணியை ஃபுட் டெலிவரி நிறுவனம் மூலம் வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த ஹோட்டல் என்ன சொல்லுகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் பவர்ச்சி என்ற பெயரில் பிரபல அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன்ஃபுட் டெலிவரி நிறுவனத்தில் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், அந்த உணவகத்தில் இருந்து உணவு பெறப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
பார்சலை வாங்கி பிரித்து சாப்பிட ஆவலோடு பார்த்துள்ளார். அதில் சிக்கன் இல்லை, இறந்து போன பல்லி தான் இருந்துள்ளது. பிரியாணியில் பல்லி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ஓட்டல் ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த வாடிக்கையாளர் நேரே ஹோட்டலுக்கு சென்று அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி உணவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்த நிலையில், அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஓட்டலில் ஆய்வு நடத்தி மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.
சோதனை செய்த அதிகாரிகள் ஓட்டல் சமையல் அறை சுகாதாரமாக இல்லாத நிலையில், ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு, பல்லியோடு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


