Venkatarama Ramalingam Pillai: பிறந்ததினம் இன்று!

சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை 1888- ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார்.

இவர் 1906-ல்விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். இவர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர் நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 1932-ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இவர் இயற்றிய பாடல் தான் `கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஓன்று வருகுது. இப்பாடல் போராட்டக்காரர்கள் வழிநடைப் பாடலாகப் பாடி சென்றுள்ளனர்.

இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் முத்திரை பதித்த இவர் மொத்தமாக 66 நூல்களை எழுதியுள்ளார். நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். இவர் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்.சாகித்ய அகாடெமியின் தமிழ்ப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்துள்ளார்.

தேசியக் கவிஞர், அரசவைக் கவிஞர், காந்தியக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் 1972-ல் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *