“மோடியின் தவறு; தண்டனை மக்களுக்கு!” – ராகுல் காந்தி விளாசல்……

Advertisements

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி செய்த தவறுகளுக்கான விலையை மக்கள் கொடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசுகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தியுள்ளன.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் மேற்காசியச் சிக்கலின் போது பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலனைக் கருதி உறுதியான நிலையை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் விளைவாகப் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி செய்த தவறுகளுக்கான விலையை மக்கள் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீதி வசூல் இன்னும் பல தவணைகளாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *