
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமானது முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு பகல் நேரங்களில் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள நிலையில், நேற்று இரவு நேரங்களில் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது.இதன் காரணமாக நேற்று இரவு கீழ் கோத்தகிரி பகுதியில் அதிகபட்சமாக 124 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து இன்று காலை முதலே அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் உதகை, குன்னூர், கோத்தகிரி மலைப்பாதை மற்றும் நகர் பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருகிறது.இதனால் கடும் குளிர் நிலவுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து மழையின் தாக்கம் இருந்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை குளிர்ந்த காலநிலையில் மேற்க் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் பகல் நேரங்களில் மலைப்பாதையில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டுகொள்ள முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.



