நாடாளுமன்றத்தில் பேசாமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர் – கார்கே தாக்கு.!

Advertisements

நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாகப் பேசாமல், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டுக்கொண்டு நேரத்தை வீணடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவர் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சாடினார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பது குறித்தும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். “எவ்வளவு முயற்சி செய்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை; அவைக்கு வர அவர்கள் பயப்படுகிறார்கள்

என்றால், ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *