ECI Important Advice: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு!

Advertisements

தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் கமிஷன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையிலிருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்குச் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலத்தில் அதிகாரிகளின் ஆய்வுப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்களை வகுக்க முடிவு செய்து உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் 5 மாநிலங்களுக்கும் அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது நினைவுகூரத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *