சென்னையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் மாறிவரும் காலநிலை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கம்போல் இன்றும் காலையில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆனால், மாலையோ முழுமையாகக் காட்சியே மாறியது. திடீரென உருவான மேகக் கூட்டங்களால் சில பகுதிகளில் குளிர்ச்சியான காற்று வீசியதுடன், மாலையில் திடீர் மழையும் வெளுத்து வாங்கியது. இதனால் கடுமையான வெப்பத்தில் தவித்த சென்னை மக்களுக்கு இந்த மழை பெரும் குளிர்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது.
“கொஞ்சம் வெயில்… கொஞ்சம் மழை” என்ற வகையிலான இந்த மாறிவரும் சீதோஷண நிலையால் சென்னை வாசிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

