தமிழக அரசின் அறங்காவலர் தேர்வு குழுவில் பாடகர் வேல்முருகன்..!

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்ய பிரத்யேகக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும், அனுபவமிக்க அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராமநாதன் மற்றும் பிரபல பின்னணிப் பாடகர் டாக்டர் த.வேல்முருகன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பின்னணிப் பாடகர் வேல்முருகன் தமிழக அரசின் இந்த முக்கியக் குழுவில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவினர் கோயில்களுக்கான தகுதியான அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *