வீரர்களை டிரேடு செய்ததா CSK? – வெளியானது உண்மை நிலவரம்.!

Advertisements

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி குறித்த வதந்திகள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதுகுறித்த உண்மையான நிலவரம் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் வீரர்களை டிரேடு (Trade) செய்வது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, சென்னை அணி ஏற்கனவே இரண்டு வீரர்களை டிரேடு செய்துவிட்டதாகத் தகவல்கள் உலா வந்தன. ஆனால், அந்தத் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக நியமித்த பிறகே, அடுத்த கட்ட நகர்வான வீரர்களின் டிரேடு மற்றும் ஏலத்திற்கான திட்டமிடல்களில் முழுமையாகக் களமிறங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எனவே, சிஎஸ்கே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என ரசிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *