
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 28-ந்தேதி ஆரம்பமாகியது. நேற்றுடன் இந்தப் போட்டி நிறைவடைந்தது. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்தது.
தேசிய விளையாட்டில் வாள்வீச்சு போட்டியில் தமிழகத்திற்கு 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
பெண்கள் தனிநபர் சேபர் பிரிவில் பவானி தேவி (சென்னை), ஆண்கள் தனிநபர் பாயில் பிரிவில் பிபிஷ், சேபர் பிரிவில் கிஷோநிதி (இருவரும் கன்னியாகுமரி) ஆகியோர் தங்கம் வென்றனர். ஜாய்ஷ் அஷி தா, சுவர்ண பிரபா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி (சேலம்) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணிகள் பாயில் பிரிவில் தங்கம் வென்றது.
பெண்கள் தனிநபர் பாயில் பிரிவில் ஜாய்ஷ் அஷி தா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜெபர்லின், பெனி குயிபா (க.
