பஸ்சில் கண்டக்டராக வேலை செய்யும் வடிவேலு, வேறு பஸ்சில் மாறி ஏறிவிட்டு அந்த பஸ்சில் உள்ள பயணிகளிடம் வம்பு செய்வது போல உள்ள நகைச்சுவை காட்சிகள் திரைப்படம் ஒன்றில் இடம்பெற்று சிரிப்பலையை ஏற்படுத்தும்.அது போலத்தான் அனைவரின் கிண்டல்களுக்கும் உள்ளாகி இருக்கிறது அமைச்சர் ஸ்ரீநாத்தின் செயல்….
தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சராக உள்ள ஸ்ரீநாத்.,திரைத்துறையிலுந்து அரசியலுக்கு வந்தவர்.முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பரும் கூட… இந்த தாக்கம் தான் ஸ்ரீநாத்தை அமைச்சரவையில் அமைச்சராக்கிஅழகு பார்த்தவர்.
இந்தநிலையிலதா அமைச்சர் ஸ்ரீநாத் கடந்த மாதம் 26-ம் தேதி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர், திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மீனவ மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மீனவ மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அமைச்சர் ஸ்ரீநாத் கேட்டறிந்தார். இந்நிலையில், அவரது அதிரடி ஆய்வுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், திருவான்மியூர் பகுதியில் உள்ள மீனவ மக்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் ஸ்ரீநாத்திடம், ‘கச்சத்தீவு மீட்பு’ குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு , பலமுறை ‘நோ கமெண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இந்த விஷயம் மிகப்பெரும் பேசுபொருளானது.
தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஒருவர், தமிழ்நாடு மாணவர்களின் கச்சத்தீவு மீட்பு குறித்த கேள்விக்கு அவர் கூறிய பதில் மிகப்பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் சர்ச்சையில் சிக்கி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் அமைச்சர் ஸ்ரீநாத். தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அவர், நன்றி தெரிவித்ததென்னவோ பக்கத்து தொகுதி மக்களுக்குத் தான்.
ஆம்…. தான் வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிதானா என்று தெரியாமல், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட புன்னைக்காயல் மீனவ மக்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீநாத், திமுக வெற்றி பெற்ற தொகுதியில் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி நடத்திய அவர், எங்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த உங்கள் ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் என பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தனது தொகுதி எல்லை எது என்றுகூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’எனத் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.
அதே நேரத்தில், அமைச்சர் தரப்பினர் இந்த விமர்சனங்களை நிராகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல்வேறு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாகவும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் வைத்து தவறான புரிதல் உருவாக்கப்படுவதாகவும் அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் தங்கள் தொகுதியின் பிரச்சினைகள், எல்லைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து முழுமையான புரிதலுடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.



