அமெரிக்கா – ஈரான் இடையே வெடித்தது நேரடிப் போர் – வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்!

குவைத் விமான நிலைய சேதம் ஈரானின் தாக்குதலால் அல்ல, கோளாறடைந்த அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணையால் ஏற்பட்டது என ஈரானின் புரட்சிகரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஈரானின் ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக குவைத் மற்றும் பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான், ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 63 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், குவைத் விமான நிலைய சேதம் ஈரானின் தாக்குதலால் அல்ல, கோளாறடைந்த அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணையால் ஏற்பட்டது என ஈரானின் புரட்சிகரக் காவல்படை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்து, ஈரான் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *