SIR Discussion : ஒரு APP கூட சரியா வேலை செய்யலை..கொந்தளிக்கும் பிடிஆர்!

Advertisements
SIR பணிகளால் பிஎல்ஓ-க்கள் மற்றும் சாமானிய மக்கள் அடைந்து வரும் கஷ்டங்கள் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். எந்த பயிற்சியும் இல்லாமல், மோசமான செயலி ஒன்றை வைத்துக் கொண்டு பிஎல்ஓ-க்கள் கஷ்டப்படுவதாக கூறிய பிடிஆர், SIR பணிகளுக்கு போதுமான நேரம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மாநிலம் முழுவதும் SIR பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் ஆணையம் தரப்பில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்கள் பலருக்கும் SIR படிவங்களே சென்று சேரவில்லை. அதேபோல் படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல், சாமானிய மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனிடையே மதுரை மாவட்டத்தில் சுமார் 30 முதல் 40 சதவிகித படிவங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2006ல் தேர்தல் நடைபெற்றது. அப்போது 2005 மே மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதேபோல் 2001 தேர்தல் முடிவடைந்து 2002 தேர்தலில் தான் இந்த பணிகள் செய்யப்பட்டன. தேர்தலுக்கு பல ஆண்டுகளுக்கு முன் இந்த முயற்சிகள் செய்யப்பட்டன. 2026 சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அது வந்துவிட்டால் வாக்காளர் பட்டியலில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இதனால் SIR பணிகளை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்திற்குள் முடிப்பது சாத்தியமா?
குறைவான ஊழியர்கள், குறைவான பயிற்சி.. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அந்த செயலில் மிகவும் மோசமாக உள்ளது.. எப்போது கேட்டாலும் App Crash என்கிறார்கள். எங்களின் கவலை எல்லாம் என்னவென்றால், தேவையான நேரம் கொடுத்து பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து சீர்திருத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், பலரும் விடுபடும் சூழல் உருவாகும்.
மதுரை மத்தியத் தொகுதியை பொறுத்தவரை 2025 செப்டம்பர் 30ஆம் தேதி 2.26 லட்சம் பேர் இருப்பதாக சொல்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில் சில ஆயிரம் பேர் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். இப்போது அவர்கள அனைவரும் டிசம்பர் 4ஆம் தேதிக்கு பின் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் 2005 தகவலின் படி, வெறும் 76 ஆயிரம் வாக்காளர்களே இருக்கின்றனர்.
இந்த விவகாரம் காரணமாக சாமானிய மக்கள் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கு முன் நமது மக்கள் ஃபார்மையே பார்த்திருக்கவில்லை. இப்போது நாம்தான் பிஎல்ஓ-க்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறோம். பிஎல்ஓ-க்களுக்கு பயிற்சி போதவில்லை. சில இடங்களில் பிஎல்ஓ-க்களையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் பிஎல்ஓ-க்கள் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்கள். ஒரு 5 சதவிகிதம் பேர் மாற்றப்பட்டுள்ளார்கள். பலரும் 30 நாட்களுக்குள் பணிகளை முடிக்க கஷ்டப்படுகிறார்கள். சமயநல்லூர் என்ற தொகுதி இப்போது மதுரையில் கிடையாது. மதுரை வடக்கு என்று புதிய தொகுதி உருவாகி இருக்கிறது. புது தொகுதிகள் உருவாகி இருந்தால், மிகப்பெரிய பிரச்சனையாகும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *