Advertisements

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அந்த கட்சியில் தேர்தல் பணிக் குழு தலைவராக பதவி வகிக்கிறார் அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்க்கு அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி வரும் ஐந்து பேர் குழுவில் இவரும் ஒருவராக இருக்கிறார். தற்போதைய அரசியலில் ஆதவ் அர்ஜுனாவும் ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
மியான்மர் நாட்டில் கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மார்ட்டின். இவர் தமிழ்நாட்டில் உள்ள கோவைக்கு வந்து 1988 ஆம் ஆண்டு அங்குள்ள காந்தி புரத்தில் புதிதாக லாட்டரி தொழிலை தொடங்கினார் . தமிழ்நாட்டில் அப்பொழுது லாட்டரி சீட்டுகள் மிகவும் மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருந்த காலகட்டம் இந்த காலகட்டத்தில் லாட்டரி தொழில் மூலமாக மார்ட்டின் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார் .
தற்போது தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகா , கேரளா , சிக்கிம் , மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களில் மார்ட்டின் தொடர்ந்து லாட்டரி தொழில் நடத்தி வருகிறார் .லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் மார்ட்டின் லாட்டரி தொழில் மட்டுமல்லாமல் பூடான் நேபாளம் என சர்வதேச அளவில் பல தொழில்கள் செய்து வருகிறார். கோடை கணக்கில் பணம் சம்பாதித்து வைத்திருக்கும் இவர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளரான மார்ட்டின் அந்த கட்சிக்கு 1400 கோடி ரூபாய் நிதியாக கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் லாட்டரி தொழில் மூலம் சட்ட விரோத பரிவர்த்தனை செய்து அரசுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்க துறையில் புகார் இருக்கிறது. இவர் மீது மொத்தம் 32 வழக்குகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
இவரது மனைவி லீமா ரோஸ் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான பாரிவேந்தரின் ஐ.ஜே.கே – கட்சியில் மாநில பொறுப்பில் பதவி வகித்து வருகிறார் .
இந்த தம்பதியரின் மகன்தான் சார்லஸ் மார்ட்டின். இவரும் ஏராளமான தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது சகோதரியைத்தான் ஆதவ் அர்ஜுனா திருமணம் செய்துள்ளார் . மார்ட்டின் குடும்பத்தில் உள்ள சொத்துக்களை ஆதவ் அர்ஜுனா அபகரிக்க பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திமுக கட்சியுடனும் தொடர்பில் இருந்தார்.
இதன் கடைசி கட்டமாகத்தான் அவர் தற்பொழுது விஜய் கட்சியில் இணைந்து இருக்கிறார் ஆதவ் அர்ஜுனாவும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் ஒரு கள ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் மார்ட்டின் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருந்து வந்தார். இவரை பாரதிய ஜனதா கட்சியின் ஸ்லீப்பர் செல் என்பார்கள் . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் .
தற்போது இவர் திடீரென புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார் . முன்னதாக இவரது முழு பெயர் கொண்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பதை குறிக்கும் வகையில் ஜேசிஎம் என்ற பெயரில் மக்கள் இயக்கம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுது அதே ஜேசிஎம் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அடுத்த மாதம் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார் இந்த கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்படுகிறது .
தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அங்கு முதல்வராக இருக்கிறார் . தற்பொழுது இவருக்கும் பாஜக டெல்லி மேலிடத்திற்க்கும் இடையே மோதல் நடந்து வருகிறது என்பது முக்கிய செய்தி ஆகும் . இந்த சூழ்நிலையில் சார்லஸ் மார்ட்டின் புதிதாக கட்சியை தொடங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். அவர் பேசும் பொழுது , வருகிற டிசம்பர் மாதத்தில் புதிய கட்சி அறிவிக்கப்படும் தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன் . அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்த போகிறேன் என தெரிவித்துள்ளார் .
இதன் மூலம் வருகிற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களிலும் சார்லஸ் மாட்டின் தொடங்கியுள்ள ஜே சி எம் மக்கள் கட்சி போட்டியிடுகிறது இதில் கண்டிப்பாக 25 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார் சார்லஸ் மார்ட்டின் . திடீரென
சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பல ரகசியங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது . வருகிற சட்டமன்றத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை கழற்றி விட்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க திட்டமிடுகிறது அதன் ஒரு பகுதியாகத்தான் சார்லஸ் மார்ட்டின் கட்சி தொடங்கியிருக்கிறார்.
இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருவார் என்று சொல்லப்படுகிறது . இது மட்டுமல்லாமல் சார்லஸ் மார்ட்டின் தந்தை லாட்டரி அதிபர் மார்ட்டின் புதுச்சேரியில் டிஸ்கோ கிளப் மற்றும் லாட்டரி தொழிலை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு வசதியாகத்தான் தனது மகனை அரசியல் களத்தில் அவர் நேரடியாக இறக்கி விடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தற்போதைய என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் பலரும் சார்லஸ் பக்கம் தாவ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசியலில் சார்லஸ் மார்ட்டின் புதிதாக களம் இறங்குவதால் அங்கும் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக பார்க்கப்படுகிறது . இதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் மதிமுகவிலிருந்து விலகிய , மல்லை சத்தியா புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் . இவரும் தனது கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து வருகிற தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார் .
ஏற்கனவே திமுகவுடன் மதிமுக கூட்டணியாக இருக்கும் பட்சத்தில் வைகோ மகன் துரை வைகோ தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பேசி வருவதாக தெரிகிறது. இதனால் திமுகவிலிருந்து மதிமுக ஒருவேளை பிரிந்து விடலாம் என்று சூழ்நிலை இருக்கிறது. அப்படி சூழ்நிலை ஏற்படும் பொழுது திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என மல்லை சத்யா மிகப்பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார் இது தொடர்பாக அவர் திமுக மேல் இடத்திலும் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தெரிகிறது .
இதற்கிடையே ஆதவ் அர்ஜூனாவை பொருத்தவரையில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் ஒரு ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவதாக சொல்கிறார்கள். தனது மாமனார் மார்ட்டினுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆட்டரி தொழிலை தொடங்க வேண்டும் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற திட்டம் அவரது கையில் இருப்பதாக தெரிகிறது . இந்த திட்டத்தை செயலாக்கும் வகையில் தான் அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசியமாக பேசி வருகிறார் . பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேரும் பொழுது அதிமுக கூட்டணி வெற்றி பெறும் .
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழகத்தில் நாட்டறி தொழில் நடத்துவதற்கு தனக்கான அனுமதியை பெற்று விடலாம் என ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது . இது தொடர்பாகத்தான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சு வெளியே உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஆதவ் அர்ஜுனாவின் ரகசிய திட்டம் குறித்து நடிகர் விஜய்க்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
நடிகர் விஜய்யை பொறுத்தவரையில் கூட்டணி எதுவும் வேண்டாம் தனித்தே போட்டியிடுவோம் இதன் மூலம் தோல்வியடைந்தாலும் தனது பலம் என்ன என்பது தெரிந்துவிடும் . அதன் பிறகு அடுத்த தேர்தலில் வேண்டுமானால் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் தான் ஏதாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



