
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.
இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன்டன் (70) கிராமி விருதை வென்றார்
‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக Best New Age Album என்ற பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள MCC கல்லூரியில் பயின்ற இவர், தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
