கடலூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி!

Advertisements

கடலூர்: 

கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்குக் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 12 ஆயிரத்து 100 பேருக்கு‌ அரசு ‌ நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் ரூ.23.93 கோடியில் புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இன்று (நவ.25) 12.30 மணிக்குக் கடலூர் நகருக்கு வருகை புரிந்தார்.

அவருக்குக் கடலூர் ஆல்பேட்டை பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் சி.வே.கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், ஐயப்பன் எம்எல்ஏ மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழியில் பல இடங்களிலும் திமுகவினர் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *