உலகக் கோப்பை கால்பந்து – காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16வது சுற்றுப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் வான்கூவரில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. போட்டியின், முதல் மற்றும் இரண்டாம் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் முறைக் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், சிறப்பாக விளையாடிய சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. இதன்மூலம், சுவிட்சர்லாந்து  அணி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் கொலம்பியா அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *