
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 560 ரூபாய் குறைந்து ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




