ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நாளை விடுமுறை!

Advertisements

ஈரோடு:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து இந்தத் தொகுதிக்குக் கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளைக் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *