
பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இனிமையான குரல் வளத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா எனப் பல மொழிகளில் பின்னணி பாடல்களைப் பாடி உள்ளார்.
தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார். தனது பாடல்களுக்காகத் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்திய சினிமாவின் வெற்றிகரமான பாடகிகளில் ஸ்ரேயே கோஷல் முக்கியமானவர். மேலும் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் பாடகிகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
ஸ்ரேயா கோஷல் தனது சிறு வயது நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்குத் தேவ்யான் என்ற மகன் இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் அவ்வப்போது தனது இசை நிகழ்ச்சிகள்குறித்த வீடியோக்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்களயும் அவர் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தற்போது பதிவிட்டுள்ளார். கொஞ்சம் கிளாமராக இருக்கும் இந்தப் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

