
Olympics Boxing: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா 75 கிலோ எடை குத்துச் சண்டை பெண்கள், பிரிவில், நார்வே வீராங்கனையை வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் பாரிஸ் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்தத் தொடரில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ஒலிம்பிக் தொடரின் 5வது நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய காலிறுதிக்கான போட்டியில் நார்வே வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திக் காலிறுதிக்கு முன்னேறினார் லவில்னா
இவர் கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிலையில் , இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை இந்தியர்களிடம் உள்ளது.

