Shraddha Kapoor: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisements

பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் ரூ.4.50 கோடி மதிப்புடைய விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷரத்தா கபூர். இவர் ஆஷிக் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஷரத்தா கபூர், ரூ.4.50 கோடி மதிப்பிலான காரை வாங்கி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


இதற்கு முன்னதாக ஷரத்தா கபூரிடம் எளிமையான கார்கள் மட்டுமே இருந்தன. அதில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மாருதி சுசுகி விட்டாரா மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்கள் மட்டுமே ஷரத்தா கபூரிடம் இருந்து வந்தன. இந்த நிலையில், மிகவும் விலை உயர்ந்த உயர் ரக கார் ஒன்றை ஷரத்தா கபூர் வாங்கியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியானது. லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா மாடல் காரை வாங்கியுள்ளார். பல சிறப்பம்சம் கொண்ட இந்த காரின் விலை ரூ.4.50 கோடி என கூறப்படுகிறது.

நவராத்திரி கொண்டாட்டமாக முதல் விலை உயர்ந்த காரை ஷரத்தா கபூர் வாங்கியுள்ளார். சக்தி வாய்ந்த 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 எஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 640 ஹெபி திறன் கொண்டதாக இருக்கும் வகையில் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஷராத்தா கபூர் வாங்கிய லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா மணிக்கு 100 கிலோ மீட்டரை 3.2 விநாடிகளில் எட்டக்கூடியது. இதன் டாப் ஸ்பீடில் மணிக்கு 325 கிலோ மீட்டர் சீறி பாயும் லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா காருக்கு இந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டு.

இந்த நிலையில் சிவப்பு நிற காருக்கு முன்னாடி அமர்ந்திருக்கும் ஷரத்தா கபூரின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் லம்போர்கினி காரை வைத்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் ஷரத்தா கபூரும் இணைந்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *