Illegal Relationship murder: மனைவி துடிதுடித்து இறப்பதை பார்த்து ஆனந்தமடைந்த கணவன்!

Advertisements

ஊருக்குள் ஓடி வந்த ராஜ்குமார் அயோ என் பொண்டாட்டிய யாரோ வெட்டிக் கொன்னுட்டாங்க எனக் கையில் வெட்டு காயங்களுடன் ரத்தம் சிந்தியபடி  கதறி அழுது ஊரைக் கூட்டுகிறான்…

பதறிப் போன அப்பகுதி மக்கள்  என்னாச்சு ஏதாச்சுனு பதறிப் போய்ச் சம்பவ இடத்திற்கு போய்ப் பார்த்தனர்…அப்போது ராஜ்குமாரின் மனைவி பிரவீனா ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு துடிக்கத் துடிக்கக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்…

மனைவியைப் பார்த்துக் கதறி அழுத ஊர் பொது மக்கள் ராஜ்குமாருக்கு  ஆறுதல் கூறி மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று காயங்கங்களுக்கு சிகிச்சையும் அளித்தனர்…

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து போன ப்ரவீனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்…

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி உத்தரவின் படி டிஎஸ்பி பழனிச்சாமி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் பல திடுக்கிடும் சாட்சியங்கள் கிடைத்துள்ளது. அதில் இரு கள்ள காதல்,  ஒரே எதிரி, 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து ப்ரவீனா என்ற பெண்ணைத் தீர்த்துக் கட்டியது அம்பலமாகியுள்ளது…


இந்நிலையில் போலீசார் பார்வை முழுவதுமாக ராஜ் குமார் மேல் விழுந்தது… போஸாருக்கே உண்டான கிடுக்குபிடி விசாரணையைத் தொடங்கினர்….

அப்போது செல்லாக்காசு ராஜ் குமாருக்கு  அவரின் அண்ணி ஆனந்தியுடன்   தொடர்பு ஏற்பட்டு அவ்வப்போது போக்கும் வரதுமாக இருந்துள்ளார்… இதனை அறிந்த ராஜ்குமாரின் மனைவி துடைப்பதை வைத்து ஆனந்தியை சரமாரியாகத் தாக்கி விட்டுச் சென்றுள்ளார்…

இதனை அறிந்த ராஜ் குமார் மனைவியை அடித்துக் கொடுமையும் படுத்தியுள்ளார்…  இதுதான் கொலைக்கான காரணமாக இருக்கு எனப் போலீசார் மூச்சு விடுவதற்குள் மற்றொரு டுவிஸ்ட் போலிஸாருக்கு காத்திருந்தது…

அது தான் அந்த வாட்சப் மெசேஜ்… அம்மு அவளை முடித்து விட்டேன் இனி நாம் என்ஜாய் பண்ணலாம் என்ற மெசேஜ்… இந்தக் காட்சியில் தான் சுகன்யா என்ற பெண் அறிமுகமாகிறாள்…

ராஜ்குமார் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்… அப்போது  பணிக்குச் சென்று வரும்போது தனது இருசக்கர வாகனத்தைச் சுகன்யா பணிபுரியும் கடைக்கு முன் நிறுத்திச் சுகன்யாவை அடிக்கடி பார்த்துச் பழகியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ள தொடர்பாக  மாறவே இருவரும் ஒரு நாள் திட்டமிட்டு ஊரை விட்டுச் சென்னைக்கு ஓடி வந்து உல்லாசமாக இருந்துள்ளனர்…. கணவன் காணாமல் போனதை உண்மையென நம்பிய  அப்பாவி மனைவி காவல் நிலையத்தில் காணவில்லையெனப் புகார் அளித்துள்ளார்…


உடனே புகாரைப் பெற்று கொண்ட  போலீசார் சென்னையிலிருந்த சுகன்யாவைவயும் ராஜ்குமாரையும் கண்டு பிடித்து, இரு வீட்டாரையும் அழைத்துச் சமாதானப்படுத்தி ராஜ் குமாரை மனைவி பிரவீனாவுடன் அனுப்பிவைத்துவிட்டு… சுகன்யாவை அவரது கணவன் சுரேஷுடன் அனுப்பி வைத்தனர்…

ஆனாலும் தீராத கள்ள காதல் மோகத்தில் இருந்த ராஜ்குமாரும், சுகன்யாவும் அடுத்த இரு மாதத்தில் பெங்களூருக்கு ஓடிச் சென்றுள்ளனர்… இந்த முறை பிரவீன் புகாரளிக்கவில்லை மாறாகச் சுகன்யாவின் கணவர் சுரேஷ் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லையெனப் புகார் கொடுத்துள்ளார்…

இந்த முறையும் கோபப்படாத காவல் துறையினர் பெங்களூருவிலிருந்த கள்ள காதலர்களை அழைத்து வந்து இரு குடும்பத்தையும் வரவழைத்துப் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்…

அதனால் பிரவீனா மீது கோபமடைந்த ராஜ் குமார் இவள் இருக்கும் வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது… எனவே  மனைவியைக் கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளார்…

அப்போது யாரை வைத்து இந்த கொலையை செய்யலாம் என யோசித்த ராஜ்குமார் நினைவுக்கு வந்தது அண்ணி ஆனந்தி தான்…. ஏற்கனவே ப்ரவீணாவால் அசிங்கப்பட்ட அண்ணி ஆனந்தியிடம் ஐடியா கேட்டான் படுபாதகன் ராஜ்குமார்…

உடனே ஓகே சொன்ன ஆனந்தி… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அக்கா மகன்  தீபக் என்ற 19 வயது இளைஞரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அதற்கு தீபக்  பிரவீனாவை தீர்த்து கட்ட வேண்டும் என்றால் தனக்கு இரண்டு லட்சம் வேண்டும் என்று பேரம் பேசி உள்ளனர்… எனவே சிறிதும் தாமதிக்காது ராஜ் குமார் ஏர்டெல் ஆப் மூலம் ஒன்றரை லட்சம் கடன் வாங்கி கொண்டு அதில் சிறிது தொகையை ஜிபேய் மூலம் தீபக்குக்கு அனுப்பியுள்ளார்…

பணம் வந்ததும் தீபக் தலைமையிலான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் சரண்குமார், லக்கி என்ற லக்சன், பப்லு என்ற 5 பேர்  கூலிப்படையை வரவழைத்து கொலையை எப்படி செய்ய வேண்டும் என்று திட்டத்தை கூறியுள்ளனர்…
சம்பவத்தன்று திட்டம் தீட்டியபடி ஒரு பக்கம் தீபக் தலைமையிலான கூலிப்படை ப்ரவீனாவை தீர்த்துக்கட்ட ரெடியாகி இருந்தனர்… மறுபக்கம் ராஜ்குமார் தனக்கு இரவு பண்ணி உள்ளது உன்னை சித்தப்பா வீட்டில் விட்டு செல்கிறேன் என அழைக்க மேய்ப்பன் பின் ஆடு செல்வதை போல வண்டியில் ஏறி அமர்ந்துள்ளார்… இன்னொரு பக்கம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்குமா என ஆனந்தி டென்சனாக இருக்க….

மோட்டார் சைக்கிளை வழி மறித்து பிரவீனாவை கழுத்தை நெரித்தனர் கூலிப்படையினர்… அப்போது கூட கணவன் மீது பாசத்தை காட்டிய காதல் மனைவி நகையை எடுத்துக்கோங்க என்னையும் என் கணவரையும் விட்டுருங்க என கெஞ்சியுள்ளார்…

ஆனால் கல்நெஞ்சகார கணவனோ மனைவி கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடித்து இறப்பதை பார்த்து ஆனந்தமடைகிறான்… கள்ள காதல் மோகத்தால் நடந்தேறிய இந்த கொலையை கேட்டு சுற்றியிருந்த காவலர்கள் ஒரு நிமிடம் உறைந்து போய் இருந்தனர்…

மேலும்  48 மணி நேரத்தில் கொலைக்கு காரணமான கணவர் ராஜ்குமார் அவரது அண்ணி ஆனந்தி மற்றும் ஐந்து பேர் கொண்ட கூலிப்படையுடன் ஏழு பேரையும் கைது செய்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி,  டிஎஸ்பி பழனிச்சாமி,ஆய்வாளர்களான அழகம்மாள், சக்திவேல், மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர்களான ராம்குமார், வினோத், அண்ணன் சங்கர், மனோஜ் ஆரோக்கியராஜ் செந்தமிழ் செல்வி உள்ளிட்ட காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *