
பிரான்சில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பிரான்சின் புகழ்பெற்ற ‘சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்’ ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச பந்தயத்தில் அஜித் குமாரின் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி கலந்து கொண்டது. இதில், அஜித்தின் அணி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது.
இந்த பெருமைமிகு தருணத்தை முன்னிட்டு அஜித்தின் மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அஜித், ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.




